To be your self...
![]() |
| உனக்கென வாழ்... |
நான் நானாக இருக்க யாரை நாடுவது என்னை தவிர,
நான் நினைத்ததை முடிக்க யாரால் முடியும் என்னை தவிர,
நான் நிஜத்தை தேடுகிறேன்
என் நிழலில் மறைந்து,
நான் நிழலிடம் விடுபட்டேன்
என் நிஜத்தை அறிந்து,
ஒருமுறையேனும் நான்
எனக்காக வாழ என்னிடம்
யாசிக்கிறேன்,
யாசிப்பது கூட யோசனை சொன்னது
நான் நானாய் இருக்க...,
சரியென்று தோன்றினால்
சட்டென செய்...
நிலை ஒன்றை அறிந்தால்
நினைத்ததை முடி...
போதும் மற்றவர்களுக்காக வாழ்ந்தது,
போதாது இனி உனக்கென வாழ்...
உனக்காக வாழ்...
பெட்ரீஷியா விக்டர்..Self love

கருத்துகள்
கருத்துரையிடுக